Categories
தேசிய செய்திகள்

“இதனை பின்பற்றினால் கடும் நடவடிக்கை”…. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து முத்து என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 -ஆம் வருடம் நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்த போது என்னுடைய உயர் அதிகாரி ஒருவர் என்னை ஆர்டர்லி வேலை பார்க்க உத்தரவிட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து காவலர் பணிக்கான அனைத்து வேலைகளும் செய்ய தயாராக இருந்தேன்.

ஆனால் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் ஆர்டர்லியாக பணியாற்ற மறுத்த காரணத்தினால் பழி வாங்கும் எண்ணத்தில் என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி பணிநீக்கம் செய்தனர். என்னுடைய பணி நீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்  வழக்கு நீதிபதி எஸ்.சுப்பிரமணியன் முன்பு இந்த  விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21, மனிதர்கள் கண்ணியத்தோடு வாழ்வதற்கான உரிமை வழங்கியுள்ளது. அதனால் மனிதர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

காவலரை ஆர்டர்லியாக பணிபுரிய கட்டாயப்படுத்துவது கண்ணியத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதால் மனுதாரரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வதாக கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், சி.ஆர்.எஃப்.ஐ வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |