Categories
சினிமா

“இதனை யாரும் நம்ப வேண்டாம்”…. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை….. என்னவா இருக்கும்?…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனல் சார்பாக தயாரிக்கிறார். தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது ‘ஆர்சி 15’ மற்றும் ‘எஸ்.வி.சி 50’ படங்களையும் தயாரிக்கிறது.

இந்நிலையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அறிமுக நடிகர்ம் மற்றும் நடிகைகள் தேவைப்படுவதாகவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது. இந்த அறிவிப்பால் பலரும் இதற்கு விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கண்டு தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தங்கள் தரப்பில் இருந்து இது போன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் இந்த தகவல் முற்றிலும் பொய். மேலும் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |