Categories
மாநில செய்திகள்

இதயக்கனி எம்ஜிஆர் நினைவு நாள்… முதல்வர் பழனிசாமி ட்விட்…!!!

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரை புகழால் மக்கள் மனதைக் கவர்ந்து இழுத்த எம்ஜிஆர் “முகம் காட்டும் ராமச்சந்திரா முப்பதாயிரம் வாக்குகள் ” என்ற அண்ணாவின் அழைப்பை ஏற்று அரசியலில் பல உச்சங்களை தொட்டார். முதல்வராக தோல்வியையே சந்திக்காத எம்ஜிஆரின் நலத்திட்டங்கள் காலமும் அவர் புகழ் பேசும். இன்று பலதை இடது மையம் என அனைத்து தரப்பு கட்சிகளும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதற்கு சான்று.

அவரின் மறந்த தினமான இன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தை நிறுவிய மாபெரும் புரட்சித் தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச் செம்மலின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |