அண்ணாச்சி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
எலும்புகளை வலுவாக்க அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவு மாங்கனீஸ் சத்துக்கள் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க வைத்திருக்க அத்தியாவசியமான பொருட்களை கொண்டுள்ளது. அன்னாசி பழத்தை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இருதய அமைப்பைப் பாதுகாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். அன்னாசி பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். அதோடு இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும். ஒரு கப் அன்னாசிப் பழத்தை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் 73% மாங்கனீசு கிடைக்கின்றது. இது ஈறுகளை வலுவாக்கும். பற்களை வலிமையாக்கும். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கின்றது.