Categories
தேசிய செய்திகள்

இதயத்தில் நான் இளமையாக தான் இருக்கிறேன்…. 19 வயது பெண்ணை திருமணம் செய்த பாபா…. தீயாய் பரவும் வீடியோ…..!!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த யூடிபர்  பாசித் அலி என்பவர் வெளியிடும் காதல் கதை இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானை சேர்ந்த லியாகத் அலி என்ற   70 வயது ஆணுக்கும்,  ஷுமைலா அலி என்ற 19 வயது பெண்ணுக்கும் நடக்கும் வித்தியாசமான காதல் கதை . இந்நிலையில் பாபா இதயத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார் என்று நம்புவதால் இந்த ஜோடி வயது வித்தியாசத்திற்கு பயப்படாமல் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளது. இவர்கள்  காலை நடை பயிற்சி செய்யும் போது சந்தித்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் அலி  ஷுமைலாவை   கவர விரும்பினார்.

அதனால் ஒரு நாள் அந்த நபரின் பின்னால் ஜாகிங் செய்யும் போது ஒரு பாடலை பாட முடிவு செய்தார். இதன் மூலம்   இவர்களின் காதல் கதை தொடங்கி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இதுகுறித்து ஷிமைலா  கூறியதாவது. காதல் எப்போதும் வயதை பார்ப்பதில்லை. என் பெற்றோர் சிறிது காலம் எதிர்த்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களை சமாதானப்படுத்தி விட்டோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து லியாகத் கூறியதாவது. எனக்கு 70 வயதாக இருந்தாலும் இதயத்தில் இளமையாக இருக்கிறேன். இந்நிலையில் காதல் விஷயத்தில் வயது ஒரு காரணம் அல்ல. மேலும் எனது மனைவியின் சமையலில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் நான் உணவகங்களில் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்  என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |