மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர் மாவட்டத்தில் இருக்கும் மண்மங்கலத்தை அடுத்துள்ள பெரியவள்ளி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியினர். கடந்த 24 ஆம் தேதி சரஸ்வதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.
இதனால் குழந்தை பெண்ணின் வயிற்றிலேயே இறந்து பிறந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறந்தது என்று உறவினர்கள் குற்றம் சுமத்தி மருத்துவமனையின் வாசலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அதோடு இதில் தொடர்புடைய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர்.