உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களின் உடம்பிலும் உயிர் இருப்பதற்கு முக்கிய காரணம் இதயத்துடிப்பு ஆகும். இந்த இதயத்துடிப்பு ஒருவரின் உடம்பில் நின்று விட்டால் அவர் இறந்துவிடுவார். இது இயற்கையான ஒரு நிகழ்வாகும். ஆனால் வில்சன் கிரேச்மேன் என்பவர் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இவர் 40 கிராம் எடை கொண்ட பேஸ்மேக்கர் என்ற கருவியை கண்டுபிடித்தார். இந்த கருவியை நோயாளிகளுக்கு வைத்து வெற்றி கண்டார். இது இதயத்தின் அருகில் வைக்கப்படுவதால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக லித்தியம் அயோடினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலமாக பல மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டு வருகின்றது.