Categories
பல்சுவை

இதயத்தை நொறுக்கும் தாய் யானையின் பாசம்…. துயரத்தில் ஆழ்த்திய குட்டியின் இறப்பு…. கலங்க வைக்கும் வீடியோ….!!!

மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அன்பு, பாசம் மற்றும் உணர்ச்சி என அனைத்துமே உள்ளது. அதனை நமக்கு உணர்த்தும் வகையிலான காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய் யானை ஒன்று திடீரென உயிரிழந்த தனது குட்டியின் மரணத்தை மனதார ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றது.

அதன் பின்னர் அந்த குட்டியை பிரிய முடியாமல் அதன் உடலை ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமந்து செல்கிறது அந்த தாய் யானை. அதனை வன அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. துக்கத்தில் இருக்கக்கூடிய அந்தத் தாய் யானையுடன் 30 பெரிய யானைகளும் சேர்ந்து சென்றது. இருந்தாலும் யானை குட்டி எப்படி இருந்தது என்பது அதில் தெளிவாக தெரியவில்லை. அந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |