இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த முத்திரையை நாம் டெய்லி செய்துவந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
இந்த முத்திரைக்கு ம்ருத்யூசஞ்சீவி என்று பெயர். அதாவது ம்ருத்யூ என்றால் மரணம். சஞ்சீவி என்றால் மரணம் என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.
இந்த முத்திரையை எப்படி செய்வது என்றால் ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலை அடிரேகையைத் தொட வேண்டும். இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நேராக நீட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சினைகள் சரி ஆகின்றது. ரத்த ஓட்டத்திற்கு மிகவும் உகந்ததாக உள்ளது’ உயர் அழுத்தம் கட்டுக்குள் இருப்பதற்கு இந்த முத்திரை உடனடி பலனைத் தருகிறது.
வாய்வு அதிகமாவதால் ஏற்படும் வயிறு உப்புசம், வயிற்று இரைச்சல் போன்ற பிரச்சனைகளிலிருந்து குணமாக்குகிறது. நெஞ்சு வலி, வாய்வு, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும். 40 வயதைக் கடந்தவர்கள் மன அழுத்த சூழலில் இருக்கும் பொழுது இந்த முத்திரையை செய்து வந்தால் இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
காலை மாலை வெறும் வயிற்றில் 10 முதல் 30 நிமிடங்கள் இதை செய்து வந்தால் மிகவும் நல்லது. இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். இதனை உயிரை காக்கும் முத்திரை என்று சொல்லலாம். இது மாரடைப்பு நெஞ்சுவலி போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்யும்.