அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து இருதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து பரிமாறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஆக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (42). இவர் பக்கத்து வீட்டு பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரின் இருதயத்தையும் வெட்டி எடுத்து தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விருந்து சமைத்து பரிமாறிய ஹோமிசைட் கொலைகாரனை அமெரிக்கா போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமன்றி மாமா மற்றும் மாமாவின் பேத்தியையும் கொலை செய்துள்ளான். மேலும் செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த பயங்கர குற்றவாளி தனக்கு ஜாமின் வேண்டாமென்று கூறியுள்ளான். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இந்த கொடூர கொலைகளை செய்துள்ளான்.
முதலில் சிக்கஷாவில் ஆண்ட்ரியா லின் பிளாங்கென்ஷீப் என்ற பெண்ணை அவரது வீட்டிலேயே கொன்று இருதயத்தை எடுத்து வந்து தன் குடும்பத்திற்கு உருளைக்கிழங்குடன் சேர்த்து வதக்கி விருந்துச் சமைத்துள்ளான். பிறகு வீட்டுக்கு வந்த பால் ஆண்டர்சன் தன் மாமாவையும் அவரின் பேத்தியும் துடிக்கத் துடிக்கக் கொன்றான். இக்கொலை சம்பவத்தை பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 67 வயதுடைய அவரது மாமா பிணமாக கிடந்தார். குழந்தை பேத்தியும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
டெக்ஸி என்ற அவரது அத்தையை இரு கண்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றபோது அவர் எப்படியோ உயிர் தப்பினார்.பால் ஆண்டர்சன் தன் வாக்குமூலத்தில் மூட நம்பிக்கையின் காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்து இதயத்தை எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து விருந்து பரிமாறினால் வீட்டில் உள்ள பேய் பிசாசுகள் நீங்கிவிடும் அதற்கத்தான் செய்ததாக கூறினான். இந்நிலையில் ஏற்கனவே குற்றவாளியாக சிறைக்குச் சென்றிருந்த பால் ஆண்டர்சன் ஜனவரி மாதம் விடுதலையானார். 2017 ம் ஆண்டு போதை மற்றும் ஆயுத வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறை சென்றான். பிறகு இவனது தண்டனை கவர்னரால் 9 ஆண்டுகள் குறைக்கப்பட்டு பரோலில் வெளியே வந்து தன் அத்தை மாமா வீட்டில் தங்கியிருந்தான்.
மேலும் கொலை சம்பவத்திற்காக கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட இவன் கதறி அழுது எனக்கு ஜாமீன் வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். இவ்வாறு பல கொடூர கொலைகளை செய்த இவனை மன்னித்து தண்டனையை குறைத்து பரோலில் அனுப்பியது எவ்வளவு பெரிய தவறு என்று வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடி வருகின்றனர். மேலும் இரக்கமில்லாமல் இந்த கொலைகளை செய்யும்போது பால் ஆண்ட்ரசன் போதை பொருள்களை உபயோகித்துள்ளன? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் கடும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.