பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் இதயம் செயல் இழந்து விட்டதால் செயற்கை இதயத்தை பெட்டியில் சுமந்தவாறு உயிர் வாழ்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழிகளை இயற்கை அமைத்துக் கொடுக்கின்றது. பலர் தங்கள் வாழ்க்கையில் துன்பங்களை மட்டும் பெரிதாக எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் தற்கொலை இறுதியான தீர்வு அல்ல என்று மாற்றியமைக்கும் வகையில் பிரிட்டனை சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது.
அதனால் அவர் ஹரிபில்டர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் அவரின் இதயம் முழுவதும் செயலிழந்து விட்டதாகவும், மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் மூலம் இயக்கப்படும். இந்த கருவியின் மொத்த மதிப்பு 73 லட்சம் ஆகும். இது அடங்கிய கருவியை ஹூசைன் தனது முதுகில் மாட்டிக் கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் அந்த பையை எடுத்துக் கொண்டு தான் செல்வார். இதுகுறித்து அவர் கூறுகையில் என் குடும்பத்துடன் இந்த புத்தாண்டை கொண்டாட உதவிய ஹரிபில்டு மருத்துவமனைக்கு நான் நன்றி கூறுகிறேன். நான் உயிருடன் வாழ ஒரு தீர்வு உருவாக்கியது மிக சிறப்பானதாகும்” என கூறினார். இதயத்தை பையில் சுமந்து கொண்டு பிரிட்டனைச் சேர்ந்த பெண் உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.