Categories
Tech டெக்னாலஜி

இதயம், கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய…. கூகுள் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு……!!!!!!

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தங்களது ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் கூறியதாவது, இதயதுடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் செயல்முறையை நாங்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

ஸ்மார்ட்போனை நெஞ்சில் வைப்பதன் வாயிலாக மைக்ரோபோன்களை கொண்டு இதயம் துடிக்கும் சத்தத்தை பதிவுசெய்ய முடியும். மேலும் டாக்டர்கள் ஸ்தெதஸ்கோப் உதவியை கொண்டு இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த ஆரோக்கியத்தை கண்டறிகின்றனர். இதை ஸ்மார்ட்போன் மைக்ரோபோனை கொண்டே செய்ய நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். இந்த மருத்துவம் பரிசோதனையின் ஆரம்பகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். எனினும் விரைவில் ஸ்மார்ட்போன் செயல்முறையை செயல்படுத்துவோம்.

அதேபோன்று ஸ்மார்ட்போன் வாயிலாக கண்பரிசோதனை செய்யும் அம்சத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஸ்மார்ட் போன் கேமராக்களை கொண்டு நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத கண்சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இதற்காக EyePACS மற்றும் Chang Gung மருத்துவமனையின் உதவியை நாடிஇருக்கிறோம். தற்போது எங்களது விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |