உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் விளாம்பழத்தை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
அதன்படி விளாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. தலைவலி, கண் பார்வை மங்கல், கை கால்களில் அதிக வேர்வை என அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியது. இது அஜீரண குறைபாட்டை போக்கி பசியை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். மலச்சிக்கலுக்கு சிறந்தது. மேலும் இதனை தினமும் சாப்பிடுவதால் இதயம் வலுவாக இருக்கும்.