Categories
சினிமா தமிழ் சினிமா

“இதயும் வாங்கியாச்சா”…? காத்து வாக்குல இரண்டு காதல்…. கலாய்த்து தள்ளும் “நெட்டிசன்கள்”….!!

வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள காத்துவாக்குல இரண்டு காதல் படத்தினை அண்மையில் அண்ணாத்த உட்பட பல முக்கிய படங்களை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள படம் காத்துவாக்குல இரண்டு காதல் ஆகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், நயன்தாரா மற்றும் சமந்தா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளதையடுத்து நயன்தாரா விஜய் சேதுபதி கூட்டணி 2 ஆவது முறையாக அமைவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளார்கள்.

இந்தப் படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை அண்மையில் அண்ணாத்த, எஃப்ஐஆர் போன்ற பல படங்களை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனம் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படத்தினையும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நெட்டிசன்கள் ட்விட்டரில் கலாய்த்து வருகிறார்கள்.

Categories

Tech |