Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதயெல்லாம் எப்படி அனுமதிச்சாங்க?”…. இப்ப வரைக்கும் புரியல…. கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டு டுவிட் பதிவு செய்துள்ளார். அதாவது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பயணம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி பஞ்சாப்பிற்கு 122 கி.மீ காரிலேயே பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியை எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் 122 கிலோ மீட்டர் தொலைவுக்கு காரில் பயணிக்க எப்படி அனுமதித்தார்கள் ? என்பது தற்போது வரை ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |