Categories
தேசிய செய்திகள்

இதய அறுவை சிகிச்சை: 100 குழந்தைகளுக்கு…. எங்களால் முடிந்த உதவி…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

15 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ்-100 எனும் திட்டத்தின் மூலம் இலவசமாக இருதய அறுவைசிகிச்சை செய்வதற்கு புரிந்து உணர்வு ஒப்பந்தமானது போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் மணீஷ் லகோடியா மற்றும் காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வட்டமேசை இந்தியா அமைப்பின் பகுதி தலைவர் விஜய ராக வேந்திரா மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 பிரிவு தலைவர் விபுல் ஜெயின் ஆகியோர் பங்கேற்றனர்.

மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 சென்ற வருடம் ஹார்ட்ஸ் 100 எனும் திட்டத்தின் அடிப்படையில், குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ளும் சேவையை துவக்கியது. இப்போது வரை 350க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் இந்த திட்டத்தின் வாயிலாக முடிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் குறைந்தபட்சம் 100 அறுவை சிகிச்சைகளை முடிக்கத் திட்டமிட்டுள்ள இந்த அமைப்பானது, காமாட்சி மருத்துவமனையுடன் இணைந்து அறுவை சிகிச்சைகளைச் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ் பேசியதாவது, பிறவி இதயநோய்களுக்கு சிகிச்சையளிக்க தேவைப்படும் உபகரணங்கள் விலை உயர்ந்தவை என குறிப்பிட்டார்.

விழிப்புணர்வு இல்லாமை, நிதி மற்றும் மருத்துவமனை வசதிகள் ஆகிய முக்கிய பிரச்சனைகள் காரணமாக ஏராளமான குழந்தைகள் உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் இதுவரை காமாட்சி மருத்துவமனை 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சேவை வழங்கி இருப்பதாக கூறினார். வசதியற்ற குடும்பப் பின்னணிகொண்ட குழந்தைகளுக்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக தரமான சுகாதார சேவையை வழங்க முடியும் என்று பேசினார்.

அதன்பின் ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய தலைவர் மணீஷ் லகோடியா கூறியதாவது, “குழந்தைகளின் அனைத்து இதய குறைபாடுகளுக்கும் சிகிச்சை பெற உதவும் விதமாக இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. ரவுண்ட் டேபிள் இந்தியாவின் இம்முயற்சியால் மற்ற மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களிலுள்ள நோயாளிகளும் பயனடைவதாகவும் அவர் கூறினார். முடிந்த வரையிலும் எவ்வளவு குழந்தைகளுக்கு உதவ முடியுமோ அவ்வளவு முயற்சி செய்வோம். ஆகவே உதவி தேவைப்படுபவர்கள் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100-ன் சமூகவலைதள பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறினார்.

Categories

Tech |