செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் கட்சியினுடைய செயற்குழு கூடி எவ்வளவு தொகுதிகள் என்று முடிவு செய்வோம். பாண்டிச்சேரியில் மீண்டும் மோடி அரசாங்கம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை…. நாராயணசாமி தலைமையிலான அரசாங்கத்தை செயல்பட விடாமல் செய்வதற்காக கிரண்பேடியை அனுப்பினார் மோடி.
இப்போ அந்த அரசாங்கத்தையே சிதைத்து விடுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆளுநர் தமிழிசையை அனுப்பியிருக்கிறார் .மோடி இரண்டு பெண்களை அனுப்பி புதுவை மாநிலத்தை வீழ்த்துவது, சிதைத்து விடுவது என்று முடிவு செய்து செய்திருக்கிறார் இதுவும் கண்டிக்கத்தக்கது. எதற்காக கிரண்பேடியை பதவி நீக்கம் செய்திருக்கிறார் ?
அப்படியானால் கிரண்பேடி தப்பு செஞ்சிருக்காங்க என்பதை ஒத்துக் கொள்கிறாரா ? தேர்தல் நேரத்தில் ஏன் பதவி நீக்கம் செய்யுறீங்க ? மாற்றக்கூட இல்ல, பதவி நீக்கம். புதுவை மக்கள் கிரன்பேடிக்கு எதிராக திரண்டு எழுந்து விட்டார்கள். அந்த கோவத்தை கட்டுபடுத்துவதற்காக தமிழிசையை அனுப்பியிருக்கிறார். தவறு, இரண்டுமே அந்த அரசாங்கத்தினுடைய உயிர் நாடியை அழிப்பதற்கான செயல். அவருடைய ஜனநாயக விரோதப் போக்கை புதுவை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
நேற்று ராகுல் காந்தி அவர்கள் அங்கே வந்த பொழுது மகத்தான மக்கள் எழுச்சி ஏற்பட்டது. இதுவே அவர்களுக்கான பதில் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.