சன் டிவியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே 2-ம் திருமணம் என்பதால் திருப்பதியில் திருமணத்தை எளிதாக வைத்து விட்டு சென்னையில் ரிஷப்ஷனை பிரமாண்டமாக வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த ரிசப்ஷனில் மகாலட்சுமிக்கு விருப்பம் இல்லை என்றாலும் திருமண செலவை ஈடு கட்டுவதற்காக ரிசப்ஷனை கண்டிப்பாக நடத்த போவதாக ரவீந்தர் கூறியுள்ளார். கடந்த 10 நாட்களாக ரவீந்திர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் குறித்த செய்திகள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், பலர் பல்வேறு விதமாக விமர்சனமும் செய்து வருகின்றனர். இதனையடுத்து ரவீந்தர் தற்போது மகாலட்சுமிக்கு கொடுத்த பரிசு பொருட்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகாலட்சுமிக்கு ரவீந்தர் 300-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள், 1 பங்களா வீடு மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பரிசாக கொடுத்துள்ளாராம். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் இதற்காகத்தானே மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று கூறுகின்றனர். மேலும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தற்போது ஐரோப்பா அல்லது லண்டனுக்கு ஹனிமூன் செல்ல இருப்பதாக மற்றொரு தகவலும் வெளியானதால் நெட்டிசன்கள் பொறாமையில் இருக்கின்றனர்.