தமிழ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கும் அமலா பால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதன்பின் தெலுங்கு சினிமாவை விட்டு விலகி உள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் என்ன என கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, நான் தெலுங்கில் நடிக்க வந்த போது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களில் பிடியில் இருப்பது புரிந்தது. அந்த குடும்ப நடிகர்களும் அவர்களின் ரசிகர்களும் தெலுங்கு சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். தெலுங்கில் நான் எடுத்த போது படங்கள் வித்தியாசமாக இருந்தது. மேலும் ஒவ்வொரு படத்திலும் இரண்டு கதாநாயகிகள் இருக்கின்றார்கள். கதாநாயகியை கேவலம் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகின்றார்கள் சில காதல் காட்சிகள் பாடல் காட்சிகள் மட்டுமே கதாநாயகி வருவார் மற்ற துறை முழுவதும் ஹீரோ தான் ஆக்கிரமித்துள்ளார். முழு கமர்சியல் படங்களை தான் அவர்கள் எடுத்து வந்தார்கள். அதனால் சினிமாவில் என்னால் இருக்க முடியவில்லை அதேசமயம் தமிழ் சினிமாவில் நடிப்பது எனது அதிர்ஷ்டம் மைனா படம் எனக்கு நல்ல பெயர் வாங்கி தந்துள்ளது. மேலும் மைனாவிற்கு பிறகு வந்த வாய்ப்புகள் வரிசை கட்டின பெரிய நடிகர்களுடன் கூட இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் வந்தது என தெரிவித்துள்ளார்.
Categories