தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்
44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றது. இவ்வாறு இவர் அனுப்பிய ஆடியோக்கள் 100-ஐ நெருங்குகின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வீடியோ ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், “நான் ஒரு ஒதுங்கி இருந்தா ஜெயிச்சிடுவோம் என்று சொன்னாங்க. அதனாலதான் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போ அம்மாவோட ஆட்சி போயிருச்சு. அதனால நான் திரும்ப வரேன்” என்று அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.