அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தன்னுடைய பேட்டியில் கூறியதாவது, “கவர்னரை திருப்திப்படுத்தவே அதிமுக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீட்டுக்கு எதிராக நாங்கள் போர்க்கொடி தூக்குவோம்.
அதற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் தருவோம் என கூறி வரும் அதிமுக நீட்டுக்கு எதிராக நேற்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே இதுபோன்ற பொய்யான கருத்துக்களை ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். உண்மையிலேயே நீட்டுக்கு எதிராக எண்ணம் இருந்திருந்தால் அதிமுக நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.