இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா சமீபத்தில் கூறியிருந்தார். இதே போல பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகளை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தக் கட்சி எம்பி ரோகினி கவிரத்னை பேசும்போது, இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக் கொண்டிருந்தது. அதேசமயம் உள்ளூரில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அரிசி வாங்குவதற்கு பணம் இல்லை என்பதற்காக அரசு வெட்கப்பட வேண்டும் என தெரிவித்தார். ஆனால் 37 மந்திரிகளை நியமிக்க அரசிடம் போதுமான பணம் இருப்பதாக தெரிகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.
Categories