வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் சாந்தி (60). இவருடைய பேரனான அஜித் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியிடம் அஜித் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அஜித் தன்னுடைய பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் சாந்தியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய அஜித்தை தேடி வந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சியை வைத்து அஜித்தை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடிப்பதற்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பாட்டியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.