தொழிலாளி மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இறந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியின் உறவினர் சுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது சுப்பிரமணி கூறியதாவது, எனக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். தறி தொழில் செய்த எனக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு பெரியம்மா உறவு முறை கொண்ட சின்னமாளை தேங்காய் பறித்து கொடுப்பதாக கூறி மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு அழைத்து சென்றேன். இதனை அடுத்து கீழே கிடந்த கல்லை எடுத்து சின்னம்மாளின் தலையில் போட்டு அவரை கொலை செய்தேன்.
பின்னர் உடலை மோட்டார் அறைக்குள் கொண்டு சென்று அவர் அணிந்திருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டேன். இதனை அடுத்து மின்சாரம் தாக்கி சின்னம்மாள் இறந்து விட்டதாக அனைவரையும் நம்ப வைக்க மின்சார வயரை அவரது கழுத்தை சுற்றி இறுக்கி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றேன் என சுப்பிரமணி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.