Categories
சினிமா

இதற்காக வாழ்த்து கூறிய இளையராஜா…. நன்றி சொன்ன உலக நாயகன்…. வைரல் பதிவு…..!!!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் “விக்ரம்” ஆகும். இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலரும் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 3ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகிய இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசனுக்கு இசைஅமைப்பாளரான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே.! மட்டற்ற மகிழ்சியாக உள்ளது.

மேலும் உங்களது மலர்ந்த முகம் காணக் காண சந்தோஷமாக உள்ளது. விக்ர மாமுகம் தெரியுதே, அது வெற்றிப்புன்னகை புரியுதே என மாற்றிக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “நம் அன்பை எப்போதாவது தான் நாம் பிரகடனப்படுத்திக் கொள்வோம். என்றென்றும் எனதுஅன்பு உங்களுக்கும், உங்களின் ஆசி எனக்கும் உண்டு என்று உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நமது பயணம் என்றும் போல் தொடர விழையும் உங்கள் நான்” என பதிவிட்டுள்ளார். இவர்களின் இப்பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |