Categories
தேசிய செய்திகள்

“இதற்காக 1000 மையில் கூட நடந்திடுவேன்”…. ராகுல் காந்தி நெகிழ்ச்சி டுவிட் பதிவு….!!!!

இந்திய ஒற்றுமை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கேரள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். அதன் பிறகு பேசிய ராகுல் காந்தி, நீங்கள் எழுப்பிய இந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கிறேன். அதனை தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை பெறும் முதலாளிக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது.

ஆனால் அதே நேரத்தில் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடனை திரும்ப கட்டவில்லை என்றால் அவர்களை கடன்காரர்கள் என்று முத்திரை பதிவிட்டு சிறையில் தள்ளுகின்றனர் என்று தெரிவித்தார். இதனையடுத்து பாரஜ்ஜோடா யாத்திரையின் போது கேரளாவில் நடை பயணத்தின் போது சிறுமி ஒருவரை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அத்துடன் “இதுபோன்ற தருணங்கள் அமைந்தால் ஆயிரம் மையில் கூட நடந்திடுவேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |