Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதற்கான சிகிச்சை மையம்… தயார் நிலையில் உள்ள படுக்கைகள்… கண்காணிப்பு அலுவலர் தகவல்..!!

மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 1,050 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது என்று கண்காணிப்பு அலுவலர் தகவல் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கொரோன வைரஸ் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 580 படுக்கை வசதிகளும், கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 470 படுக்கை வசதிகளும் என மொத்தம் 1050 படுக்கை வசதிகள் உள்ளன.

அவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான முனியநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் காவல்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் மூலம் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

Categories

Tech |