Categories
அரசியல்

“இதற்குக் காரணம் திமுக அரசின் மெத்தன போக்கே”…? ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…!!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மழை அதிகமாக பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் கரையை உடைத்துக் கொண்டு உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் சேதம் விளைவிப்பதையும் அனைத்து கடல் நீரும் சென்று கலப்பதையும் தடுக்கும் விதமாக மழை நீரை தேக்கி வைத்து தேவைப்படும் காலகட்டங்களில் உதவுவதற்காக அணைகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்பட்ட அணைகளை முறையாக பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. மேலும் இந்த கடமையிலிருந்து மாநில அரசு தவறும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அபாயமும் விவசாய பணிகள் பாதிக்கின்ற அபாயமும் உருவாவது தவிர்க்க முடியாததாகும்.

அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மழையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிற பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும் பராமரிப்பையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும் அணையின் முழு கொள்ளளவையும் வீணாகின்ற சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதற்கு காரணம் திமுக அரசின் மெத்தன போக்கு என விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள். இந்த சூழலில் தற்போது பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி கடலில் கலப்பதன் காரணமாக இந்த வருடம் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற விவசாயத்திற்கு தண்ணீர் வராது எனவும் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு இனிமேல் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்பு இல்லை.

அதனால் இரண்டாவது முறையாக டிசம்பர் மாதம் முதல் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்கான திறந்து விட வேண்டிய தண்ணீர் வராது எனவும் தென்னை விவசாயம் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் குறைய கூடும் எனவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகில் ஏற்பட்டிருக்கின்ற உடைப்பினை உடனடியாக சரி செய்யவும் இந்த வருடம் விவசாயத்தை அந்த பகுதி மக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யவும் இனி வருங்காலங்களாவது பருவ மழைக்கு முன்பாக அணையின் பராமரிப்பு பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |