2008 ஆம் வருடம் குருவி படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி. விஜய் நடிப்பில் உருவான அந்த படத்தின் மூலம் தயாரிப்பாளரான உதயநிதிக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. அதனால் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் அந்தப் படத்தைப் போலவே சில படங்களில் நடித்தார் உதயநிதி. ஆனால் அது அவருக்கு கைகூடவில்லை.
இந்த நிலையில் அஹமத் இயக்கத்தில் 2016 ஆம் வருடம் வெளியான மனிதன் திரைப்படம் உதயநிதி திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் நிமிர், சைக்கோ, கண்ணேகலைமானே என வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து பாராட்டை பெற்று இருக்கின்றார். இதனை தொடர்ந்து தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து இருக்கின்றார்.
மேலும் இந்த படம் மே 20ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஆகவே சமீபத்தில் உதயநிதி பேசுகையில் மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பது சந்தேகம் தான் என தெரிவித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பது சந்தேகம் என தெரிவித்து இருக்கின்றார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் இந்த தகவலால் வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.