Categories
உலக செய்திகள்

“இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா”…. அவதியில் நோயாளிகள்…. கவலையில் மருத்துவ அதிகாரிகள்….!!

மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை நாட்டில் அத்தியாவசிய பொருளான மருந்துகளுக்கு  தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பற்றாக்குறையாக  இருக்கும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யாவிடில் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என அந்நாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் உதவாதவை என்றும் மருத்துவ அதிகாரிகள்  குற்றம்சாட்டியுள்ளன.  இந்நாட்டில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாடு மற்றும் மருந்து பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மின்வெட்டு காரணமாக ஸ்கேன் உள்ளிட்ட சேவைகள் கூட ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான மருந்துகள்  இல்லாத நிலையில்  இலங்கை மருத்துவர்கள் மற்றும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இலங்கையில் இந்த சூழல் சரியாகாவிட்டால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு பல நோயாளிகள் இறக்க கூடும் என  எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இங்கு  பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |