Categories
தேசிய செய்திகள்

இதற்கும் வாடகை….. உங்ககிட்ட ஏடிஎம் கார்டு இருக்கா?…. அப்போ கட்டாயம் படித்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங் என எளிதில் வங்கி சேவையை அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டு பெற்று வருகிறார்கள். ஆனால் பணம் எடுப்பதற்கு என்னவோ ஏடிஎம் மையத்தை அணுக வேண்டிய நிலை தான் உள்ளது. வங்கி கிளைகளில் மணி கணக்கில் காத்துக் கிடக்கும் இளமை மாறி ஏடிஎம் மிஷின்களில் சில நிமிடங்களில் பணத்தை எடுத்து போடும் வசதி தற்போது உள்ளது. அவ்வாறு ஏடிஎம் மிஷினில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு அவசியம். கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கூட பணம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதற்கு சேவை கட்டணம் அதிகம். ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கும் போது ஒரு மாதத்திற்கு எத்தனை முறை இலவசமாக பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகளையும் வங்கிகள் விதித்துள்ளன. ஆனால் நிறைய பேர் ஏடிஎம் கார்டுக்கு வாடகை செலுத்த வேண்டும் என்பதை அறியாமல் உள்ளனர். அதாவது சேவை கட்டணத்தை வருடத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்பட்டது என்றாலும் அதற்கு வருடத்திற்கு ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு வருடத்திற்கு 125 ரூபாய் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தத் தொகை வங்கி கணக்கில் இருந்து ஒவ்வொரு வருடமும் பிடித்தம் செய்யப்பட்டு விடும். இதுவே பலருக்கும் தெரியாது.இதனைப் போலவே நிறைய கட்டணங்கள் நம்முடைய வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்படுகின்றன.அதனால் இது குறித்த சந்தேகங்களை உடனுக்குடன் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.ஏனென்றால் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருவதால் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ்,சேவை கட்டணம் பிடிக்கப்படுவது மற்றும் பணம் எடுப்பது போடுவது போன்ற விவரங்களை அவ்வபோது சரிபார்த்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |