அனுமதியின்றி கிரானைட் கற்கள் கொண்டு சென்ற 2 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி சாலையில் கனிமவள பிரிவு உதவி இயக்குனர் பொன்னு மணி தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.