சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருண் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் தாசில்தார் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முருகன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் காளிதாஸ் என்பவர் அனுமதி இன்றி பட்டாசுகளை தயாரிப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல்துறையினர் காளிதாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 40 பெட்டிகளில் 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.