Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி கிடையாது…. லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

செம்மண் கடத்திய 2 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள பல்பாக்கி பகுதியில் விவசாயியான உத்திரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கொங்கரப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் உத்திரசாமி தனது நிலத்தில் இருந்து 2 லாரிகளில் செம்மண்ணை கடத்தியுள்ளார். இதனையடுத்து 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2 லாரிகளையும் சிறைபிடித்து வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் செம்மண் கடத்திய 2 லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |