அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலைகள் கடந்த 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக தர்மராஜ் மற்றும் முத்துராஜ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.