Categories
தேசிய செய்திகள்

இதற்கு அனுமதி கொடுக்க நீங்கள் யார்?…. ராகுல் காந்தி மீது திரும்பிய கோபம்….. சபாநாயகர்….!!!!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 31ஆம் தேதி உரை ஆற்றினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் மக்களவையில் நடைபெற்றது. இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய அரசின் மேல் எல்லை பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தார். அதாவது “நீங்கள் யார் பேசுவதையும் கேட்பதில்லை.
பா.ஜனதாவில் இருக்கக்கூடிய என்னுடைய சகோதரர் மற்றும் சகோதரிகள் பேச்சைக்கூட கேட்பதில்லை. என்னுடைய தலித் சகோதரர் பேசுவதையும் நான் பார்த்தேன், அவருக்கு தலித் வரலாறும் தெரியும் என்று கூறினார். 3000 வருடங்களாக தலித்துகளை ஒடுக்கியது யார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் ஒருவித தயக்கத்துடன் பேசுகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் மனதில் இருப்பதை என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தவறான கட்சியில் உள்ளார்” என்று பேசினார்.
உடனடையாக பா.ஜனதா எம்.பி.யான பஸ்வான் எழுந்து பேச முயற்சி செய்தார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா தற்போது பேச அனுமதி கிடையாது, பின் தருகிறேன் என்றார். ஆனால் ராகுல் காந்தி பஸ்வானிடம் சைகை மூலமாக நீங்கள் பேசுவதற்கு அனுமதி என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ஓம் பிர்லா, “பஸ்வான் பேசுவதற்கு அனுமதி கொடுக்க நீங்கள் யார்..? நீங்கள் அனுமதி வழங்க முடியாது. அது தன்னுடைய உரிமை என்று ராகுல் காந்தியை நோக்கி தன் கண்டனத்தை தெரிவித்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி “நான் ஜனநாயகவாதி, மற்ற நபர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பேன்” என்று பதில் அளித்து தொடர்ந்து பேசினார்.

Categories

Tech |