நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜகோபால கவுண்டர் பூங்கா அருகில் அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வலியுறுத்தியும் தங்களது கோஷங்களை எழுப்பினர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் பின் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது என்றும் மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்பின் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.