Categories
உலக செய்திகள்

இதற்கு காரணம் இவர்கள்தான்?…. ஈரானில் வெடித்து வரும் போராட்டங்கள்…. திணறி வரும் அதிபர்….!!!!!

ஈரான் நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு வெளிநாடுகளின் சதி தான் காரணம் என அதிபர் கூறியுள்ளார்.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் போலீசார் தாக்கியதில் தான் அந்த பெண்  உயிரிழந்ததாக கூறி நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹிஜாப்பை கழற்றி வீசியும், அதனை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்க  அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுவரை போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தப் போராட்டம் இப்ராகிம் ரைசிக்கு எதிராக திரும்பியுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிராக பள்ளி,கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் ஆதரவாக களம் இறங்கி வருவதால் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் அதிபர் இறங்கியுள்ளார்.  இது குறித்து அவர் கூறியதாவது. இந்தப் போராட்டத்திற்கு வெளிநாட்டு சரிதான் காரணம். மேலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தான் இந்த வன்முறைக்கு காரணம் என அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

Categories

Tech |