குஜராத்தில் நபர் ஒருவர் தன் குழந்தையை பார்க்க மனைவி மற்றும் மாமியார் அனுமதிக்காததால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதராவை சேர்ந்த ஷிஷிர் தர்ஜி என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் எழுதியிருந்த கடிதத்தில் தன் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை கொடுமப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருக்கிறார். இதுகுறித்து அவரின் தாய் கூறியுள்ளதாவது, என் மகனின் மனைவி மோனிகா கடந்த ஒரு வருடமாக அவரின் பெற்றோர் வீட்டில் தான் வசிக்கிறார்.
மேலும் என் மகன் அவர் குழந்தையை காண்பதற்காக சென்றாலும் அவர்கள் குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும் தன் மகனை துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து மோனிகா மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். இதனையடுத்து தர்ஜியின் இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்த பின்பு மோனிகா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.