சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 6 பேர் மீது தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி காவல்துறையினர் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக இருந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
ஆர்.பாலக்குறிச்சி பெரிய கண்மாய் பகுதியில் சிலர் தடைகளை மீறி மாடுகளைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். இதனால் அதே கிராமத்தை சேர்ந்த ராமநாதன், பெரிய பொன்னன், ஆனந்தகுமார், கந்தசாமி, குணா, சத்தியராஜ் ஆகிய 6 பேர் மீது உலகம்பட்டி காவல்துறையினர் தடையை மீறி மாடுகளை அவிழ்த்ததாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.