Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்”… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!!!!!

முன்பெல்லாம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக புறப்பிட வேண்டி இருக்கும். ஆனால் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பும் அளவிற்கு வாகன நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் முக்குராந்தல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் இருக்கிறது. சாத்தூர் நகரை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றது. இந்த மக்கள் தங்களின் தேவைகளுக்காக சாத்தூருக்கு செல்கின்றார்கள். பல்வேறு கிராமங்களில் இருந்து இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் பலர் சாத்தூர் நகருக்கு வந்து செல்கின்றனர். அதனால் நகர் பகுதிகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலையோர கடைகள் காரணமாக சாலையின் அகலமும் மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக சாத்தூர் மெயின் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சாத்தூர் முக்குராந்தல் வழியாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்கின்றது. இந்த வழியாகத்தான் கோவில்பட்டி திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்வதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதனால் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண ரோட்டின் ஓரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் மேலும் போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்

Categories

Tech |