Categories
தேசிய செய்திகள்

“இதற்கு பெயர்தான் தற்கொலைக்கு தூண்டுவது என அர்த்தமாம்”… விளக்கம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்…!!!

தற்கொலைக்கு தூண்டுவது என்றால் என்ன? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது.

தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமலைகன்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் கழித்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 2007ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி இருவரும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சம்பவ தினத்தன்று திருமலைகன்னி உயிர் இழந்து விட,  தீவிர சிகிச்சைக்கு பிறகு வெள்ளைதுரை மட்டும் உயிர் தப்பினார். பின்னர் திருமலைகன்னியின் சகோதரர்கள் தனது சகோதரியை தற்கொலை செய்வதற்கு தூண்டியதாக கூறி வெள்ளைத்துரை மீது புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்பொழுது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2500 அபராதமும் விதித்தது. இதையடுத்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2500 அபராதமும் விதித்து திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக வெள்ளத்துரை மேல்முறையீடு மனுவை சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை தற்கொலைக்கு தூண்டியதற்காக விதிக்கப்பட்ட ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக வெள்ளைத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது: “இந்த வழக்கைப் பொருத்தவரை சம்பவம் நடந்த நாளில் மனுதாரர் மனைவியிடம் சண்டையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அது தவிர அவர் தற்கொலைக்கு எந்தவிதமான வகையிலும் தூண்டவில்லை. அதற்கு ஆதாரமும் கிடையாது. அதுமட்டுமல்லாமல் மனுதாரரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது தற்கொலைக்கு தூண்டியதாக எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனால் செஷன்ஸ் கோர்ட் விதித்த தண்டனை என்பது மிகவும் தவறானது. இதன்படி சென்னை ஐகோர்ட் மதுரை கிளை, செஷன்ஸ் கோர்ட் தீர்ப்புகளை ரத்து செய்து நீதிபதி எம்.ஆர்.ஷா
தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |