மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்தான் ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர், பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும் என்றும் பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்
மேலும், தொடர்ந்து தவறுகள் செய்யும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில், மாணவர்கள், புகைப்பிடிப்பது, ஆசியர்களை மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல்வேறு தவறுகளை தொடர்ந்து செய்து வருவதால், இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.