Categories
மாநில செய்திகள்

“இதற்கு பொது குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது”…. அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கருத்து…!!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டுவர சட்டத்தில் இடம் இருக்கிறது எனவும் தலைமையை தேர்ந்தெடுக்க பொதுகுழுவிற்கு தான் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது எனவும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார். அதிமுக ஒன்றிய தலைமை தீர்மானத்தை கொண்டுவருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்பதுரை கூறியிருப்பதாவது, கழகத்தை பணி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக்குழு 5 ஆண்டு பதவி காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் கழகத்தின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்தி பொதுக்குழுவின் அதிகாரத்தின் மூலம் ஆக மாற்றுவதற்கு உரிமை இருக்கிறது. அதிமுகவிற்கு என்று சட்ட புத்தகம் இருக்கிறது. அந்த சட்டப்புத்தகத்தில் பொதுக்குழுவில் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் பதவியில் இருந்து நீக்கியது பொதுக்குழு தான். அதிமுக பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு சென்றால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராக்கி கொள்ளுங்கள். அதற்கான கட்சி விதிகளை காட்டுங்கள் என்று  மட்டும்தான் கேட்கின்றார்கள். அதனால் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு சட்ட விதிகளில் இடம் இருக்கின்றது. மேலும் அதிமுகவின் சட்ட விதிகளின்படி ஒற்றை தலைமையா ?   இரட்டை  தலைமையா ? என்பது பற்றி பொது குழு முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |