தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கில் புதிய தளர்வுகளின்படி பொதுப்போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கிடையேயான இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாநிலங்களுக்கிடையேயான பொதுப்போக்குவரத்திற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.