செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வாசலில் இரண்டு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேற்று பிற்பகல் பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அந்த மோதல் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பள்ளி தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
Categories