Categories
மாநில செய்திகள்

இதற்கு முன் அனுமதி கட்டாயம்….. தேர்தல் ஆணையம் அதிரடி….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக உள்ள நிலையில், விளம்பரங்களுக்கும் முன் அனுமதி அவசியம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில அளவிலான விளம்பரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |