Categories
உலக செய்திகள்

இதற்கு வெளிநாட்டின் சதிதான் காரணம்…. மீண்டும் வெற்றி பெற்ற “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்”…..!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் பொது தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் அதிபராக இம்ரான் கான் இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷபாஸ்  ஷெரீப் பதவியேற்றார். இதனால் முன்னாள் அதிபர்  நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனடியாக பொதுத்தேர்தலில் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.

மேலும் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் பாகிஸ்தானில் தற்போது அதிக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  கட்சியை சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இருந்து ராஜினாமா செய்தனர். இதனால் அந்த இடங்களுக்கு கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்  பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார். இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியதாவது. முன்னாள் அதிபரின்  கட்சி மொத்தம் இடைத்தேர்தல் நடந்த 8 இடங்களில் 7 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வெற்றி  பெற்றதன் மூலம்  இம்ரான் கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி இருப்பதை காட்டுகிறது என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்   விரைவில் பொது தேர்தல் வரவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

Categories

Tech |