காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பின் அல்லுஅர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சமந்தா. அப்பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகியது. இதனையடுத்து சமந்தாவை தேடி திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. மேலும் அவரை பாலிவுட்டிலும் கூப்பிடுகிறார்களாம். சமந்தாவை டாப்ஸி தான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் திரைப்படத்தில் சமந்தாவை தான் ஹீரோயினாக தேர்வு செய்தார்களாம். ரூபாய் 2 கோடி தருகிறோம், நடிக்க வாங்க என அழைத்தாராம் சிவா.
பதிலுக்கு சமந்தாவோ ரூபாய். 2 கோடி எல்லாம் முடியாது, ரூபாய். 4 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறினார். அதன்பின் ரூபாய். 4 கோடி கொடுத்து சமந்தாவை நடிக்க வைக்க கொரடலா சிவா விரும்பவில்லையாம். முன்பாக டேட்ஸ் பிரச்சனையால் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க சமந்தா மறுத்தார் என்று கூறப்பட்டது. தற்போதோ சம்பள பிரச்சனை எழுந்து இருப்பதாக பேசுகிறார்கள். சமந்தா தனது சம்பளத்தை ரூபாய். 2 கோடியில் இருந்து ரூ. 4 கோடியாக உயர்த்தியது தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லையாம்.