பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் செங்கல் சூளைக்கு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் குருசாமி, மாவட்டச் செயலாளர் சவுந்தரபாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.